Teejay
அசுரனின் வெற்றிக்கு பிறகு டீஜே-விற்கு பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் அசுரன்.

இந்த படத்தில் தனுஷின் மூத்த மகனாக நடித்திருந்தவர் டீஜே. இப்படத்தில் டீஜேவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்படும் வகையில் அமைந்திருந்தது.

ஈழத்து பாடகரான இவருக்கு இந்த படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சீயான் 58 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இதனை உறுதி செய்யும் விதமாக டீஜேவும் சமீபத்தில் இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.