கார் ட்ரைவரால் தனக்கு ஏற்பட்ட தொல்லை குறித்து ரித்விகா ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மெட்றாஸ், கபாலி, டார்ச் லைட் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் ரித்விகா. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வென்றார்.
இவர் சமீபத்தில் uber கார் புக் செய்து பயணம் செய்துள்ளார். அந்த காரின் கண்டிஷன் சரியில்லை.
ட்ரைவர் நடந்து கொண்ட விதம் சரியில்லை என கூறி ட்விட்டரில் அந்த டிரைவரின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதனால் நெட்டிசன்கள் சிலர் இதை நீங்க uber-கிட்ட புகார் சொல்லுங்க, ட்வீட்டா எதுக்கு போடுறீங்க என விமர்சனம் செய்துள்ளார்.
ஒரு சிலர் அந்த டிரைவருக்கு என்ன கஷ்டமோ இப்படி பப்லிக்கா போட்டோ போட்டு அவரோட லைஃப்பை நாசமாக்காதீங்க எனவும் அறிவுரை கூறியுள்ளனர்.
ஒரு சிலர் ரித்விகாவின் துணிச்சலை பாராட்டியும் உள்ளனர்.
Very unsafe journey in Uber @Uber driver is so so rude & the car condition is worst, terrible.
Tata indica TN07AR4798 UBER pic.twitter.com/In35IKLwzL— Riythvika✨ (@Riythvika) November 5, 2019