Valimai
வலிமையில் காமெடிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என எச் வினோத் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களின் மூலமாக தன்னை திறமையான இயக்குனராக நிலை நிறுத்தி கொண்டவர் எச். வினோத்.

இந்த படங்களை தொடர்ந்து தல அஜித்தை வைத்து பிங்க் படத்தின் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார். இப்படமும் நல்லவொரு வெற்றியை கொடுத்தது.

மேலும் வினோத் தற்போது மீண்டும் தல அஜித்தை வைத்து வலிமை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல் வைரலானது.

ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல் என மறுத்துள்ளார் எச். வினோத். மேலும் அவர் என்னுடைய படத்தில் காமெடிக்கெல்லாம் இடம் இல்லை. வலிமை படத்தில் அஜித்தை தவிர வேறு யாரையும் இன்னு ஒப்பந்தம் செய்யவில்லை என கூறியுள்ளார்.

வலிமை படத்தின் படப்பிடிப்புகள் டிசம்பர் 10-ம் தேதி முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.