YouTube video

ST Kalyanasundaram Thanks to EPS : ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் எஸ் டி கல்யாணசுந்தரம் அவர்கள் கூறியிருப்பதாவது,

இப்போது தான் உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது என தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதிமன்ற உத்தரவு வெளியான கையோடு அம்மாவின் அரசு மீது பல்வேறு விமர்சனங்களை பரப்பி வருகிறார்கள்.

அருந்ததியர் உள் இடஒதுக்கீடு வழங்கியது திமுக அரசாக இருக்கலாம். ஆனால் இந்த இட ஒதுக்கீட்டை கடந்த ஒன்பது ஆண்டுகளாக பாதுகாத்து நடைமுறைப்படுத்தி வருவது அம்மாவின் வழியில் வந்த அதிமுக அரசு தான்.

20.2.2020 ல் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை மணிவண்ணன் IAS அவர்கள் தலைமையில் S.T.கல்யாணசுந்தரம் ஆகிய நானும் , நண்பர் செல்வகுமார் போன்றவர்கள் நேரில் சந்தித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சீனியர் வழக்கறிஞரை நியமனம் செய்து சட்டப்பாதுகாப்பை ஏற்படுத்திட வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

எங்களது கோரிக்கைக்கு செவிசாய்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கனிவோடு பரிசீலனை செய்து சீனியர் வழக்கறிஞரை நியமனம் செய்து உச்சநீதிமன்றத்தில் சட்ட பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தது அம்மாவின் அரசு தான் என்பதும் அனைவரும் அறிந்ததே.

மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு சம்பந்தமாக அதிகாரம் வழங்கினால் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்குவேன் என்று உறுதி அளித்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அது நிறைவேறும் காலம் தற்போது வந்து விட்டது.

இனியும் விமர்சனம் செய்வதை தவிர்த்து விட்டு கூடுதல் இட ஒதுக்கீடு பெற அனைவரும் ஒன்றுபட்டு ஒத்துழைக்குமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.