Bigil Atlee Vs Thalapathy 64 Lokesh
லோகேஷ் கனகராஜ் தளபதி 64 படத்திற்காக அட்லீயை பின்பற்றுவது போலவே தெரிகிறது.

தமிழ் சினிமாவில் மாநகரம் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் கைதி திரைப்படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ்.

இவர் தற்போது விஜயின் 64-வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஆஹா கல்யாணம் பவித்ரா, தொகுப்பாளி ரம்யா, சேட்டன், பிரேம், மேத்தீவ் வர்கீஸ் மற்றும் பலர் இணைந்துள்ளனர்.

அட்லீயும் பிகில் திரைப்படத்தில் இப்படி தான் பல நடிகர் நடிகைகளை நடிக்க வைத்திருந்தார். இதில் அட்லீ சிலரை பயன்படுத்தாமலே விட்டு விட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

தற்போது லோகேஷ் கனகராஜும் அதிகப்படியான நட்சத்திர பட்டாளத்தை படத்தில் சேர்த்து வருகிறார். இதனால் அட்லீ செய்த தவறை லோகேஷ் கனகராஜும் செய்து விடுவாரோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.