Thalapathy 65
அட்லீ வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் விஜயுடன் மீண்டும் ஒரு படத்திற்காக அட்லீ இணைய இருப்பதாக கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி இன்று விஜயை வைத்து தொடர்ச்சியாக தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கியவர் அட்லீ.

பிகிலை தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் ஒன்றை இயக்க இருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வரும் நிலையில் அட்லீ பிகில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அட்லீ விஜயை போலவே ஜெர்சி அணிந்துள்ளார். இருவரின் ஜெர்சி எண்ணும் 5 என்று தான் இருக்கிறது. இதனால் அட்லீ தளபதி 65 படத்தை இயக்குகிறாரோ என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இதை தான் அட்லீ மறைமுகமாக குறிப்பிடுகிறாரா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.

தளபதி விஜயை வைத்து 59,61 மற்றும் 63-வது படத்தை அட்லீ தான் இயக்கினார். இதனால் 65-வது படத்தையும் அவர் இயக்குகிறாரோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அட்லீ அடுத்த இயக்க போவது அவருடைய 5-வது படம் என்பதால் இப்படி மறைமுகமாக எண் ஐந்தை வைத்து அறிவிக்கிறார் எனவும் பேசி வருகின்றனர். உண்மை என்ன என்பதை அட்லீ தான் அறிவிக்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.