யாரும் எதிர்பாராத நேரத்தில் தர்பார் படம் பற்றி முருகதாஸ் ட்வீட் ஒன்றை பதிவு செய்து அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.
பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்திற்கு ரஜினிகாந்த் இன்று டப்பிங் பேச தொடங்கியுள்ளதாக முருகதாஸ் கூறியுள்ளார்.
இதனை ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர்.
Thalaivarin Darbar Dubbing starts today!!! #DarbarThiruvizha ???? ????
— A.R.Murugadoss (@ARMurugadoss) November 14, 2019