Serena AND Halep : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News,Wimbledon Tennis

Serena AND Halep :

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ‘நம்பர்-2’ வீரரான ஸ்பெயினின் நடால், அமெரிக்காவின் சாம் குயரியை (77வது இடம்) எதிர் கொண்டார்.

முதல் செட்டை 7-5 என கைப்பற்றிய நடால், அடுத்த இரு செட்டையும் 6-2, 6-2 என தனதாக்கினார். இரண்டு மணி நேரம் 7 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், நடால் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

தொப்பையை குறைக்கும் சக்தி பச்சை பயிருக்கு உண்டு, தெரிந்து கொள்வோமா?

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ‘நம்பர்-7’ வீராங்கனை ருமேனியாவின் ஹாலெப், தரவரிசையில் 8வது இடத்திலுள்ள உக்ரைனின் ஷிவ்டோலினாவை சந்தித்தார். முதல் செட்டை 6-1 என எளிதாக ஹாலெப் கைப்பற்றினார்.

அடுத்த செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இவர் 6-3 என 30 நிமிடத்தில் வசப்படுத்தினார். மொத்தம் ஒரு மணி நேரம் 13 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், ஹாலெப் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இத்தொடரில் முதல் முறையாக பைனலுக்குள் நுழைந்தார்.

மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் செரினா 6-1, 6-2 என செக் குடியரசின் ஸ்டிரிகோவாவை வீழ்த்தினார்.

பைனலில் ஹாலெப்- செரினா பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here