Sri Ramajayam

☆ சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதியே, வேண்டுதல்களுக்காக இதை எழுதுகின்றனர்.

☆ உலக இன்பங்கள் மட்டுமின்றி இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும்.

☆ ‘#ராம’ என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி ‘#மரா’ என்றே முதலில் உச்சரித்தார். ‘மரா’ என்றாலும் ‘ராம’ என்றாலும் பாவங்களைப் போக்கடிப்பது என்று பொருள்.

☆ ராமனுக்குள் சீதை அடக்கம், அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள் ‘ரமா’ என்று அவளுக்கு பெயருண்டு.
‘#ரமா’ என்றால் ‘#லட்சுமி’. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம்.

☆ ராம மந்திரம் எழுதுவோருக்கும், எல்லோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி) உண்டாகும். ராமன் என்ற சொல்லுக்கு பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

☆ ரா என்றால் ‘இல்லை’, மன் என்றால் ‘தலைவன்’. இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை என்பது இதன் பொருள்.

ஸ்ரீராமஜெயம் ,ஜெய் ஸ்ரீ ராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here