Thalapathy Vijay
பிகில் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் விஜய் என்று பிரபல நடிகர் குறிப்பிட்டு உள்ளார்.

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக இணைந்த படம் பிகில். இந்த படம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக எடுக்கப்பட்டது.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு. முழுக்க பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்டு இருந்த இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபத்திரத்தில் நடித்து இருப்பார்.

தளபதி 64-ல் விஜய் என்ட்ரி இப்படித் தான் இருக்கும் – நடன இயக்குனர் தினேஷ் .!

ராயப்பன் என்ற அப்பா மற்றும் மகன் கதாபாத்திரம் என இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். இந்த படம் வெளியாகி அதிக வசூல் செய்து பெரிய சாதனையை படைத்தது.

இருந்தும், அதிகப்படியான விமர்சனம் செய்யப்பட்டது. அதிலும் விமர்சகர் ஒருவர் விஜய்யை தாதா என்று சொல்லி விமர்சித்து இருப்பார்.

இதற்கு பிகில் படத்தில் நடித்து இருந்த ஆனந்த் ராஜ் பதிலளித்து உள்ளார். அவர் கூறுகையில், விஜய் நடித்து இருக்கிறார் என்பதற்காகவே இந்த படத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வருகிறார்கள்.

பிகில் படத்தின் வெற்றிக்கு முழு காரணம், விஜய் மட்டுமே என்றும் கூறியுள்ளார். விமர்சனங்களில் தனி கருத்து இருக்க கூடாது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here