
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய் இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 2-ல் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மேலும் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது.

முதலில் பாடல் புரியவில்லை என்றாலும் தளபதி ரசிகர்கள் கேட்க கேட்க மிகவும் பிடித்திருப்பதாக கொண்டாடி வருகின்றன்ர். இது வரை யூ ட்யூபில் இப்பாடல் 7.3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
ஆனால் ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடத்திலேயே உள்ளது. முதலிடத்தை தொடர்ந்து துருவ் விக்ரமின் வர்மா படத்தின் டீஸரே உள்ளது. இது தளபதி ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் வர்மா படத்தின் டீஸர் 4.6 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
