Surya Vs Thalapathy Vijay
தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு பிகில் மற்றும் கைதி அமைந்தது. தளபதி விஜயின் நடிப்பில் பிகிலும், கார்த்தி நடிப்பில் கைதி படமும் வெளியானது.

தல, தளபதி படங்கள் வெளியாகிறது என்றால் மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாகாமல் இருப்பது தான் வழக்கம்.

அதனை உடைத்து எறிந்தது கைதி படம். இந்த படத்தில் ஹீரோயின் இல்லை பாடல்கள் இல்லை.

ஒரே ஒரு இரவில் நடைபெறும் நிகழ்வு தான் படம். அப்பா, மகள் பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது கைதி.

நேரில் சந்திக்க உள்ள தல, தளபதி ? விஷயம் என்ன .?

பாடல், காதல் காட்சி என்று எதுவும் இல்லை என்றாலும் படத்தின் விறுவிறுப்பு குறையாமல் இருந்தது இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

இதனை தொடர்ந்து  தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு உள்ளார்கள்.

Surya Vs Thalapathy Vijay

அதே சமயம் சூர்யாவின் சுரரைப் போற்று படம் கிருஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கோடை விடுமுறையில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கார்த்தியின் கைதி படத்தை தொடர்ந்து, விஜயுடன் சூர்யா மோத உள்ளார். மேலும், கிருஸ்துமஸ் விடுமுறைக்கு கார்த்தி மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here