Indhuja
இந்துஜா தளபதி விஜய் மற்றும் பிகில் டீமுடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி அதன் பின்னர் சில படங்களில் நடித்து பிரபலமானவர் இந்துஜா.

இவர் இறுதியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி இவருக்கு பிறந்த நாள் சென்றுள்ளது.

தன்னுடைய பிறந்த நாளை தளபதி விஜய், ரஹ்மான் மற்றும் படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை இப்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க என அவரை வாழ்த்தி வருகின்றன.