Vijaya Productions
விஜயா ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் டைட்டில் கார்ட் வீடியோவில் விஜய் இல்லையா? என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ப்ரொடக்ஷன் நிறுவனம் பதிலளித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி இருந்த சங்க தமிழன் என்ற திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான விஜயா ப்ரொடக்ஷ்ன் நிறுவனத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் டைட்டில் கார்டில் எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

ஆனால் இணையத்தில் வைரலான வீடியோக்களில் விஜயின் புகைப்படம் இல்லை. இதனால் ரசிகர் ஒருவர் விஜயா ப்ரொடக்ஷனிடம் விஜய் இல்லையா? என கேட்க இருக்கார் என அந்நிறுவனம் பதிலளித்துள்ளது.

இதனையடுத்து ரசிகர் ஒருவர் புல் டைட்டில் கார்ட் வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.