Thala Ajith
வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களை நேரில் சந்தித்த நயன்தாரா, வெளியானது புகைப்படம்.

தல அஜித், போனி கபூர் தயாரிப்பில் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து அந்த படம் சூப்பர் ஹிட்டானது.

அதனை தொடர்ந்து, தல அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இணைந்து உள்ளார்.

அந்த படத்திற்கு வலிமை என்று பெயர் வைத்து உள்ளது படக்குழு. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.

களமிறங்க உள்ள தல அஜித் – கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள் .!

இது வரை அஜித் அவர்களை தவிர மற்ற நடிகர், நடிகைகளை இன்னும் படக்குழு தெரிவிக்கவில்லை. தற்போது Newyork சென்று உள்ள நயன்தாரா அங்கே போனி கபூரை சந்தித்து உள்ளார்.

போனி கபூரை நயன்தாரா சந்திக்கும் போது நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் மற்றும் போனி கபூருடன் குஷி கபூரும் இருந்தனர்.

இந்த சந்திப்பிற்கு பிறகு, வலிமை படத்தில் அஜித் அவர்களுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here