நவராத்திரி விழாவிற்காக பொம்மைகளை அழகாக அடுக்கி வைக்கிறாள் பார்வதி.

அப்பொழுது கோட் சூட் அணிந்த பொம்மையை ஆதியாகவும் , தாவணி அணிந்த பொம்மையை பார்வதியாக இருவரும் நினைத்துக் கொள்கின்றனர்.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலை பரிமாறிக் கொள்கின்றனர். இருவரும் பேசிக் கொண்டிருப்பதை வனஜா கவனித்து விடுகிறாள்.

வனஜா ,பார்வதியிடம் சென்று, இருவரும் ஒருவருக்கொருவர் கண்களால் ஜாடை காட்டி காதலை பரிமாறிக் கொள்கிறீர்களா? என்று கேட்கிறாள் . உடனே பரம்பரை செயினை பார்வதியிடம் திரும்ப தரும்படி சண்டை போடுகிறாள் வனஜா .

அப்போது அந்த இடத்திற்கு வந்து விடுகிறார் ஆதி .வனஜா நவராத்திரி கொலு முடிவதற்குள் அந்தப் பரம்பரை செயினை அகிலாவே உன்னிடம் இருந்து பறித்துக் கொள்ளும்படி செய்கிறேன் பார் என்று சவால் விடுகிறார். அந்த சவாலை ஏற்றுக் கொள்கிறார் பார்வதி .

சவாலில் எப்படி ஜெயிப்பது என்று யோசனையில் சிந்திக்கிறாள் வனஜா.. பின்னர் அவள் நந்தினிக்கு போன் செய்து இங்கு நடக்கும் விஷயம் அனைத்தையும் சொல்லுகிறார்.

நந்தினி, வனஜாவுக்கு உதவுவதாக வாக்களிக்கிறாள். பின்னர் பல நூறு கோடி ரூபாய் நிதியை தொழிலாளிகளுக்கு ஆயுத பூஜைபோனாஸாக தர இருப்பதாக நந்தினியிடம் சொல்லுகிறாள் வனஜா.அதற்கு நந்தினி அந்த பணம் தொழிலாளிகளுக்கு போய் சேராது ,அகிலா அவமான படும்படி, நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் அதை பொறுத்திருந்து பாருங்கள் என்று சொல்கிறாள் .

ஆதி அலுவலகத்திற்கபோது தனது அலுவலகப் பையை மறந்துவிட்டு சென்றுவிடுகிறார். அப்போது பார்வதி அதை எடுத்துக் கொண்டு போய் ஆதியிடம் ஒப்படைக்கிறாள் .இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் தன்னை மறந்து அன்பாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர் .

பார்வதி,போனில் பேசுவதை பார்த்த வனஜா கோபத்தில் கனலாய் கொதிக்கிறாள். ।நந்தினி ,வனஜா இவர்களின் சதித்திட்டத்தில் சிக்குவாளா பார்வதி? வனஜாவின் சவாலில் ஜெயிப்பாரா பார்வதி ?அடுத்த பகுதியில் பார்க்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here