Ind Vs Ban 2nd Test Match

இந்தியா – வங்காளதேசம் அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நேற்று தொடங்கியது.

‘டாஸ்’ வென்ற வங்க தேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆடுகளத்தில் புற்கள் சற்று அதிகமாக இருந்ததால் இந்திய அணி உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது.

இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் 58.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் சுருண்டது.

முகமது ஷமி 3 விக்கெட், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

இறுதியில் வங்காளதேசம் 58.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் சுருண்டது.

வங்காளதேச அணி சார்பில் மொமினுல் ஹக் 37 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 43 ரன்களும் அடித்தனர்.

அடுத்து களமிறங்கியது இந்திய அணி. ரோகித் 6 ரங்களில் வெளியேறினார். பிறகு, புஜாரா களம் இறங்கினார்.

இந்தியா முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் சேர்த்து இருந்தது.

இன்று இரண்டாம் நாள் போட்டியில் புஜாரா 54 ரன்கள் எடுத்து வெளியேற விராட் கோலி களமிறங்கினார். இவர் ரன் எதுவும் எடுக்காமல், கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரகானே 82 ரன்களுடனும், அகர்வால் 156 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள். மொத்தம் இது வரை 303 ரன்களை சேர்த்து உள்ளது இந்திய அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here