Thalapathy-64
பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் தளபதி 64. தற்போது இந்த படத்தின் கதை வெளியாகி உள்ளது.

விஜய் அவர்கள் சமீப காலங்களாக அரசியல் பேசுவது போன்ற படங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார்.

சர்கார் படத்தில் GST பற்றி பேசி இருப்பார், மெர்சல் படத்தில் மருத்துவ துறையில் நடக்கும் மோசடியை பற்றி பேசி இருப்பார்.

உறுதியானது தளபதி 65 இயக்குனர் – எதிர்பாராத கூட்டணியுடன் விஜய்?

அதனை தொடர்ந்து, தற்போது நடித்து வரும் தளபதி 64 படத்தில் கல்வி துறையில் நடக்கும் மோசடி பற்றின கதையாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

முன்பு, லோகேஷ் கூறுகையில் இரண்டாவது பாட்ஷா படமாக தளபதி 64 இருக்கும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை குழப்பி உள்ளது.

இதனை தொடர்ந்து, படத்தில் எந்த மாதிரி கதையை எதிர்பார்க்கலாம், விஜய் எந்த ரோலில் நடித்து உள்ளார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here