D Imman
சிறுத்தை சிவாவால் மீண்டும் ஒரு முறை டி.இம்மானுக்கு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி. இம்மான்.

இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருந்த விஸ்வாசம் படத்தின் மூலமாக முதல் முறையாக அஜித்திற்கு இசையமைத்து இருந்தார்.

இதனையடுத்து சிவா தற்போது ரஜினியை இயக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத்தை கமிட் செய்யலாம் என கூறியதாகவும் ஆனால் சிவா அனிருத் வேண்டவே வேண்டாம் என கூறி வந்ததாக தகவல்கள் வைரலாயின.

தற்போது தலைவர் 168 படத்தின் இசையமைப்பாளர் டி.இம்மான் தான் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அடம் பிடித்து சிவா சாதிச்சிட்டாரு என கூறி வருகின்றனர்.

டி.இம்மான் ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைப்பதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.