Miga Miga Avasaram
சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மிக மிக அவசரம்.ஸ்ரீ பிரியங்கா, ஹரிஷ் இ ராமதாஸ், சீமான் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

ஸ்ரீ ப்ரியங்கா இப்படத்தில் பெண் போலீசாக நடித்துள்ளார். இவரால் இ ராமதாஸின் நண்பர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதனால் ராமதாஸ் பிரியங்காவை வேலை வாங்கி கொடுமை படுத்துகிறார். இதனால் பிரியங்கா எப்படியெல்லாம் அவதிப்படுகிறார் என்பது தான் இப்படத்தின் கதைக்களம்.

இது ஒரு புறம் இருக்க தன்னுடைய அப்பா, அக்காவை இழந்து குடிகார மாமனிடம் இருந்து தன்னுடைய அக்கா மகளை எப்படி காப்பாற்றுகிறார். இவரின் காதல் ஒரு புறம் என பல சுவாரஷ்யங்களை எதார்த்தமான படமாக பேசியுள்ளது மிக மிக அவசரம்.

படத்தை பற்றிய அலசல் :

நாயகியா நடித்துள்ள ஸ்ரீ ப்ரியங்காவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். அவருடைய நெளிவும் வலியும் ரசிகர்களை உருக வைக்கும் அளவில் உள்ளது.

இ ராமதாஸ் உயர் அதிகாரி போலீசாக நடித்துள்ளார். அவர் ஸ்ரீ பிரியங்காவை கொடுமை படுத்தும் காட்சிகள் நமக்கே கோபத்தை வர வைக்கும். அந்த அளவிற்கு கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார்.

சீமான் ராமதாசுக்கு மேலதிகாரியாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் தான் சரி என சொல்ல வைக்கும் அளவிற்கு நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.

தொழில் நுட்பம் :

இசை :

இஷான் தேவ்வின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. பெண்களின் கஷ்டத்தை பற்றிய பாடல் ஒன்று நிச்சயம் ரசிகர்களை கவரும்.

ஒளிப்பதிவு :

பாலபரணிகாட்சியையும் தெளிவாக படம் பிடித்து படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.

இயக்கம் :

சுரேஷ் காமாட்சி இந்த படத்தை முழுக்க முழுக்க ஒரு எதார்த்தமான படமாக கொடுத்துள்ளார். சிறிய பட்ஜெட் படங்களே மக்களிடம் எதார்த்தமான கதையும் நடிப்பையும் கொண்டு போய் சேர்க்கும் என்பது இப்படம் ஒரு உதாரணமாக இருக்கும்.

தம்ப்ஸ் அப் :

1. ஸ்ரீ ப்ரியங்காவின் நடிப்பு
2. இயக்கம்
3. இசை

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான சில லாஜிக்கல் தவறுகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here