Nayanthara
நடிகை நயன்தாரா மீண்டும் மதம் மாறி விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்.

நடிகரும் டேன்ஸ் மாஸ்டருமான பிரபு தேவாவை காதல் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்த போது இந்து மதத்திற்கு மாறினார்.

ஆனால் இந்த காதல் பிரிந்து விடவே மீண்டும் தேவாலயம், கிறிஸ்துவ வழிபாடு என இருந்து வந்த நயன் தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருவதால் மீண்டும் ஹிந்துவாக மதம் மாறி விட்டதாக கூறப்படுகிறது.

விக்னேஷுடன் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதற்காகவே நயன்தாரா ஹிந்துவாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.