Thalapathy 64
விஜய் பிகில் படத்திற்கு பிறகு தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். தற்போது அந்த படத்தின் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தீபாவளி விருந்தாக கைதி மற்றும் பிகில் படங்கள் வெளியாகியது. இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் இரு படங்களும் வெற்றி பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து விஜய், கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

கியூட் லுக்கில் விஜய்.. இணையத்தை கலக்கும் புகைப்படம் – ஆனால் அந்த பாப்பா யார்?

முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்து விட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக டெல்லி சென்று உள்ளது படக்குழு.

இ‌ந்த நிலை‌யி‌ல், டெல்லியில் அதிக காற்று மாசுபாடு காரணமாக படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டது.

தற்போது படப்பிடிப்பை தொடங்கி உள்ள படக்குழு விஜய் மற்றும் மாளவிகா சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாகி வருகின்றது.

மேலும் ஒரு தகவல் கிடைத்து உள்ளது. இந்த படத்தில் சாந்தனு, ஸ்ரீ ராம், ஆண்டனி என நிறைய பேர் படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

கைதி நல்ல லாபம், ஆனால் பிகிலுக்கு அப்படி இல்லை – விநியோகிஸ்தர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

இவர்களை தொடர்ந்து பிரேம், மேத்தீவ் வர்கீஸ், மற்றும் சேட்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள்.

இ‌ந்த படம் வித்தியாசமாக இருக்கும் என்று தெரியும் ஆனால் இத்தனை நட்சத்திர பட்டாளத்தை படத்தில் இணைக்க காரணம் என்ன என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here