தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பேட்ட படத்தில் நடித்து வருகிறார்.

கார்த்தி சுப்புராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி, சனந்த் ரெட்டி, பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் புதியதாக பிரபல கோலிவுட் ஹீரோவான சசிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. தற்போது பேட்ட படத்தின் படப்பிடிப்புகள் லக்னோவில் நடந்து வருகிறது. இதனையடுத்து மதுரையில் நடைபெற உள்ள படப்பிடிப்புகளில் சசிகுமார் கலந்து கொள்வர் என கூறப்படுகிறது.