Uses of Vasambu
Uses of Vasambu

Uses of Vasambu

“பிள்ளை வளர்த்தி” என்று கூறப்படும் வசம்பின் அதிசக்தியான மருத்துவ குணம், பற்றி தெரிந்து கொள்ளுங்கள்?

வசம்புக்கு பிள்ளை வளர்ப்பான் என்ற மறு பெயர் உண்டு. வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

☆ கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.

இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

☆ வசம்பைச்சுட்டு, கரியைத் தேனில் குழைத்து, குழந்தைகளின் நாக்கில் பூச, நன்றாகப் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்; குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, பேதி கட்டுப்படும்.

☆ 2 முதல் 3 ஸ்பூன் வசம்பை தூள் செய்து, விஷம் அருந்தியவர்களுக்கு கொடுக்க உள்ளே இருக்கும் விஷம் அனைத்தும் வெளியே வந்துவிடும்.

☆ தேங்காய் எண்ணெயில் வசம்பை பொடித்திட்டு, குப்பைமேனி சாறை சேர்த்து காய்ச்சி எண்ணெயை வடிகட்டி சிரங்கின் மீது தடவிவர சிரங்கு விரைவில் குணமாகும்.

☆ வசம்புடன் பூண்டு வைத்து அரைத்து வெல்லத்துடன் சேர்த்துத் தின்றால் குடலில் உள்ள தீமை தரும் பூச்சிகள் மலத்துடன் வெளிப்படும்.

☆ துளசி பூங்கொத்து, திப்பிலி, வசம்பு பொடி செய்தது சர்க்கரை கலந்து 1 சிட்டிகை பொடியை தேனில் கலந்து சாப்பிட கக்குவான் தீரும்.

☆ வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட நியாபக சக்தி பெருகும்.

☆ வெள்ளை பூண்டு, வசம்பு, ஓமம் சம அளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் சாப்பிட ஜன்னி குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here