தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய், சூர்யா, சிவகார்திகேயன், தனுஷ், விக்ரம் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

இந்த படங்களை தொடர்ந்து தற்போது பிரபல நடிகரும் இயக்குனருமான சசிகுமாருக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சுந்தரபாண்டியன் படத்தை இயக்கி இருந்த பிரபாகரன் தான் இப்படத்தை இயக்க உள்ளாராம். மேலும் இப்படத்திற்கு கொம்பு வச்ச சிங்கம் என பெயர் வைத்திருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.