Bigil Atlee
தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தும் தயாரிப்பாளரை திருப்தி செய்யவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் என இரண்டு வெற்றிப் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து தளபதி விஜய் நடித்த படம் பிகில்.

இந்த நிலையில் சுந்தர் c ஆக்க்ஷன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இளம் இயக்குனர்களை பற்றின தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.

வசூலில் பிகிலை முந்திய கைதி – அதிகாரப்பூர்வாக அறிவித்த தியேட்டர் நிர்வாகம்.!

தற்போது படம் இயக்க்கும் இளம் இயக்குனர்கள் பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ணும் போது, அந்த ஹீரோக்களை திருப்திப் படுத்துவதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

ஆனால், தயாரிப்பாளர்களை கவனத்தில் எடுத்துக்கொள்ள மறந்துவிடுகின்றனர். ஒரே காட்சியை ஒரு நாள் முழுவதும் எடுப்பது, தேவை இல்லாமல் அதிக ஆட்களை ஹீரோ பின் நிற்க்க வைப்பது என்று உள்ளார்கள்.

அது மட்டும் இல்லமால், சொன்ன பட்ஜெட்டை விட படம் முடிக்கும் போது அதிக செலவு செய்துவிடுகிறார்கள். இது எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

இவர் மறைமுகமாக பிகில் படத்தை இயக்கிய அட்லீயை குறிப்பிடுகிறார் என்பது தெளிவாக தெரிகின்றது என பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here