SAC Interview
விஜயின் அப்பா எங்களுக்கு கொடுத்த பேட்டியில் மிகவும் பிடித்த படம் ஒத்த செருப்பு தான் என கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் இன்றைய உச்ச நடிகராக இடம் பிடித்திருப்பவர் தளபதி விஜய். இவரின் தந்தை இயக்குனர்களில் வழிகாட்டியாக விளங்கிய SA சந்திரசேகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

74 வயதாகும் இவர் நான்கு ஐந்து வருட இடைவெளிக்கு பிறகு கேப்மாரி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க அதுல்யா ரவி, வைபவி சாண்டிலா ஆகியோர் நாயகியாக நடித்துள்ளனர்.

வெகுவிரைல் வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. படு ரொமான்டிக்கான காட்சிகளால் ட்ரைலர் நிரம்பி வழிந்தது.

இந்நிலையில் SAC எங்களுக்கு அளித்த பேட்டியில் இது முழுக்க முழுக்க இன்றைய காலகட்ட இளைஞர்களின் காதல் கதையம்சம் கொண்ட படம் என கூறியுள்ளார். இது அடல்ட் படம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் சமீபத்தில் வெளியான படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என கேட்டதற்கு பார்த்திபன் சாரின் ஒத்த செருப்பு திரைப்படம் என கூறியுள்ளார்.

மேலும் அந்த படத்தை பிடிக்கும் என சொல்ல மாட்டேன், ரொம்ப ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார். விஜயின் பிகில் படம் ரிலீசாகி இருந்தும் SAC வேறொரு படத்தை குறிப்பிட்டது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக் தான்.