Bigil

பிகில் படத்தில் இடம் பெற்றிருந்த காட்சி ஒன்றும் அப்பட்ட காப்பி என நெட்டிசன்கள் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில்.

இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பல காட்சிகள் வேறு வேறு படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டவை என நெட்டிசன்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் தற்போது பிகில் படத்தில் மிகவும் பிரபலமான பலரையும் கவர்ந்த ஒரு காட்சியும் காப்பி தான் என நெட்டிசன்கள் தற்போது கண்டு பிடித்துள்ளனர்.

இந்த வீடியோவை வெளியிட்டு அட்லீ உங்களுக்கு கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லையா? நல்லா இருந்த இந்த காட்சியும் காப்பி தானா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.