smooth Foot
smooth Foot

Foot explosion :

பாதங்கள் வெடிப்பின்றி மென்மையாக வேண்டுமா? இதோ! வீட்டு வைத்திய முறை டிப்ஸ்

பாத வெடிப்பு மறைய இயற்கை வழிகள்:

☆ சாதாரணமாக பாதங்களில் வெடிப்பு ஏற்படுகின்றன. இதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு பாத வெடிப்பு ஒரு தீரா பிரச்சனை.

☆ இந்த பாத வெடிப்பை முற்றிலும் குணப்படுத்த முடியுமா என்றால், முடியாது. ஆனால் தொடர்ந்து பராமரிப்பதன் மூலம் வெடிப்புகளை கட்டுப்படுத்தலாம். உங்கள் பாத அழகை இயற்கை முறையில் காப்பாற்றிக்கொள்ள சில குறிப்புகள்.

(1) வேப்பிலை பேஸ்ட்:
கையளவு வேப்பிலையை எடுத்து அதனுடன் சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

சூடான நீரில் கால்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின்னர், சுண்ணாம்பும் வேப்பிலையும் கலந்த பேஸ்ட்டை தடவவும்.

15 நிமிடங்கள் கழித்து பாதத்தை ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். பாதம் மிருதுவாக வெடிப்பின்றி காணவேண்டும் என்றால், ஒய்வு நேரத்தில் வாரம் ஒரு முறை இவ்வாறு செய்யுங்கள்.

(2) பப்பாளி ஸ்க்ரப் :
நன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் ஸ்க்ரப் செய்யுங்கள். தொடர்ந்து இவ்வாறு செய்வதின் மூலம், பிளவு ஏற்பட்ட பகுதியில் தோல்கள் ஒன்று சேர்ந்து புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும்.

(3) உருளைக் கிழங்கு:
பொடிசாக வெட்டிய உருளைக் கிழங்கை வெயிலில் காய வைத்து, பொடியை தூளாக்கி நீரில் கலந்து பாதங்களில் தடவினால் பாத வெடிப்பு நீங்கும்.

(4) கண்டங்கத்திரி:
மருந்தாக பயன்படும் கண்டங்கத்திரியின் இலை சாற்றை, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி கால் கைகளிலுள்ள வெடிப்புகளுக்கு தடவி வர வெடிப்புகள் குணமாகும்.

(5) கடுகு எண்ணெய்:
வெடிப்பு மறைந்து, மிளிர வேண்டுமென்றால், தொடர்ந்து கடுகு எண்ணையை பாதங்களில் தேய்க்க வேண்டும். மேலும் மசித்த வெந்தய கீரையில் கடுகு எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து வந்தால், பாதங்கள் மென்மையாகும்.

(6) வாழைப்பழம்:
பாதத்தில் உண்டாகும் சுருக்கங்கள் மறைய, பாதம் மிருதுவாக, வாழைப் பழத்தை மசித்து உங்கள் பாதங்களில் தடவவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here