Thalapathy Vijay
விஜய் பேசிய வசனங்கள் பாடலாக உருவாகி சமூக வளையதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்று வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும் பல இயக்குனர்களுக்கு முன்மாதிரியாகவும் வலம் வருபவர் எஸ்.ஏ சந்திரசேகர்.

தளபதி விஜயின் தகப்பனாரான இவர் தற்போது தன்னுடைய 70-வது படமாக ஜெய், அதுல்யா, வைபவி சண்டிலா ஆகியோரை வைத்து கேப்மாரி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் இருந்து நேற்று ஒரு பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் விஜய் பேசிய உசுப்பேத்திரவன் கிட்ட உம்முனு இருக்கணும்னு கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனு இருக்கணும்னு போன்ற வாக்கியங்கள் பாடல் வரிகளாக இடம் பெற்றுள்ளன.

இது விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.