Bharath Signed in Radhe
தொடர் தோல்வியால் துவண்டு போயிருந்த பரத்திற்கு மிக பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் காதல் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி பலரையும் கவர்ந்தவர் பரத். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த இறுதியாக ரிலீசான படங்கள் கை கொடுக்கவில்லை.

மேலும் இந்த நவம்பரில் பரத் போலீசாக நடித்துள்ள காளிதாஸ் என்ற திரைப்படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் பரத்திற்கு தற்போது பாலிவுட் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆம், இந்தியில் சல்மான் கானை வைத்து பிரபு தேவா இயக்கி வரும் ராதே என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனால் இனி பரத்தின் திரையுலக வாழ்க்கையில் நல்லவொதொரு திருப்புமுனை உண்டாகும் என எதிர்பார்க்கலாம்.

radhe