இளம் நடிகர்களில் அதர்வா அதிக தமிழ் ரசிகர்களை கொண்டவர். இவர் மீது தற்போது பண மோசடி புகார் எழுந்துள்ளது.
இதயம் முரளியின் மகன் அதர்வா. இவர் தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்ததற்கு இவருக்கு விருது வழங்கப்பட்டது.
தற்போது குருதி ஆட்டம் மற்றும் ஒத்தைக்கு ஒத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதர்வா மீது புகார் அளித்து உள்ளது.
எல்லாம் ரெடி தல அஜித் வந்தா மட்டும் போதும் – வலிமை அப்டேட் .!
எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் மதியழங்கன் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
அதில், செம போத ஆகாதே என்ற படத்தில் ஏற்பட்ட விநியோக நஷ்டத்திற்கு என மொத்தம் 6 கோடி அதர்வா பொறுப்பேற்று உள்ளார்.
இவர் அதற்கு பதிலாக மின்னல் வீரன் என்ற படத்தில் நடித்து தருவதாக ஒப்பந்தம் செய்து இருந்தார். ஆனால், அதுபோல நடிக்காமல் அதர்வா ஏமாற்றிவிட்டார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்று தருமாறு அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தது.