Vomiting stomach save
Vomiting stomach save

# நீண்ட தூரம் பயணம் என்பது பலருக்கும் உடலளவில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தலை சுற்றல், குமட்டல், வாந்தி போன்ற காரணங்களால் சிலர் பயணம் செய்வதையே வெறுக்கின்றனர்.

இப்படி நீண்ட தூரம் பயணம் செய்யும் போது வரும் வாந்தியைத் தடுக்க சில வழிமுறைகள்.

# பயணத்தின் போது வரும் வாந்தியைத் தடுக்க சோம்பு பயன்படுகிறது. பயணத்தின்போது சோம்பை சிறிது வாயில் போட்டு மென்று வந்தால் வாந்தி வருவது தடுக்கப்படும்.

# ஒரு எலுமிச்சம் பழத்தை சிறிது நீரில் கலந்து குடித்தால் அல்லது பழத்தை கடித்து சாற்றை சிறிது சிறிதாக அருந்தினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

# சர்க்கரை மற்றும் உப்பை சிறிது நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் வறட்சி அடையாமலும் வாந்தி வராமலும் பார்த்துக் கொள்ளும்.

# ஒரு கிராம்பு துண்டை வாயில் போட்டு மென்று வந்தால் கிராம்பின் வாசனையும் அதன் சுவையும் வாந்தி வருவதை உடனே தடுக்கும்.

# சிறிதளவு இஞ்சியை நீரில் போட்டு அதனுடன் தேன் கலந்து பயணம் செய்யும் நாட்களில் குடித்துவர வாந்தி வரும் பிரச்சனை தீரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here