நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் பெங்களூரு அணிகளும் மோதின. தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்வி அடைந்த நிலையில் இப்போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
இக்கட்டான சூழலில் ஆட்டத்தை தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணி பெரிதும் முயன்றும் ஒன்னும் எடுபடவில்லை.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே பெங்களூரு அணியின் ஆதிக்கமே இருந்தது. இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணி போராடி 14 புள்ளிகள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் பெங்களூரு அணி 25 புள்ளிகளில் முன்னிலையில் இருந்தது. மிக அதிக வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணியை பெங்களூரு அணி வென்றது.
இது வரை நடந்த அத்தனை போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் அணி முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ் தலைவாஸ் தொடர் தோல்வி ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திக்கும், வருத்தத்திற்கும் வழிவகுத்தது.