Darbar
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள தர்பார் படத்தின் தீம் மியூசிக் மற்றும் போஸ்டர் வெளியாகி உள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் முறையாக இணைந்த படம் தர்பார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து உள்ளார்.

இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து 1st லுக் மற்றும் 2nd லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்த கட்டமாக, படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார். அதனால், தீம் மியூசிக் மீது அதிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தார்கள்.

மேலும், தமிழில் கமல், மலையாளத்தில் மோகன்லால், இந்தியில் சல்மான் கான் மற்றும் தெலுங்கில் மகேஷ் பாபு ஆகியோர் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here