National Junior Athletics Tamil Nadu
National Junior Athletics Tamil Nadu

National Junior Athletics Tamil Nadu – தேசிய ஜீனியர் தடகள போட்டியில், தமிழக அணி 4 தங்கம் மற்றும் 14 பதக்கங்களுடன் 2-வது இடம் பெற்றுள்ளது.

வெங்கடேஸ்வரா பல்கலை. தாரகராமா விளையாட்டு மைதானத்தில் நடந்த தொடரில், 309 வீரர், வீராங்கனைகள் அடங்கிய தமிழக அணி களமிறகியது.

மகளிர் உயரம் தாண்டுதலில் லட்சண்யா, ஆண்கள் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் ஜாய் அலெக்ஸ், மற்றும் மகளிர் 200 மீட்டர் ஓட்டத்தில் ஹரோன் மரியா மற்றும் மகளிர் குண்டு எறிதல் ஷர்மிளா ஆகியோர் தங்கம் வென்று இருக்கின்றனர்.

அத்துடன், மகளிர் உயரம் தாண்டுதல் போட்டியில் பிரதிக்ஷா, யமுனா ஆண்கள் 100 மீட்டர் ஓட்ட தொடரிலும்,

மகளிர் உயரம் தாண்டுதல் போட்டியில் வைதேகி வசிஸ்தா, மகளிர் நீளம் தாண்டுதலில் காருண்யா நல்லி, ஈட்டி எறிதலில் பிரியதர்ஷினி ஆகியோர் வெள்ளி வென்றனர்.

மற்றும் ஆண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில், முகமது சையத், மகளிர் 100மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் அட்சயா, நீளம் தாண்டுதல் போட்டியில் மரியாள் அன் மோத்தா, குண்டு எறிதலில் மோனிகா ஆகியோர் வெண்கலம் வென்றது.

மத்தியப்பிரதேச அணி 7 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

மற்றும் தமிழகம் 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் பெற்று 2-வது இடம் பிடித்தது. 3-வது இடத்தில் 2 தங்கம், 1 வெண்கலம் பெற்று உத்திர பிரதேசம் உள்ளது.