திருமணம் தடை நீக்கும் சில வழிபாடுகள்:
(1) ஓர் ஏழைப் பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சக்திக்கு ஏற்ப புத்தாடை அளித்து, உணவு அளித்தால், திருமணம் விரைவில் நடைபெறும். மாங்கல்யச் சரடு தானம் செய்யுங்கள். சகல திருமண தோஷமும் தீரும்.
(2) ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.
(3) நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சுமங்கலி பூஜை செய்து, தினமும் மூன்று சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, தங்களால் இயன்ற அளவிற்கு வஸ்திரம், தாம்பூலம் அளித்து நமஸ்கரிக்க வேண்டும். இவ்வாறு செய்துவர திருமணத்தடை உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.
(4) வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி, மஞ்சள் பொடி அபிஷேகமும், பால் அபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தால் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமையும்.
(5) ஆலயத்தில் உள்ள நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில் வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
(6) கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் இந்த 6 வகை தோஷங்களும் நீங்கி உடனே திருமணம் ஆகிவிடும்.
(7) முருகன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
(8) வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சித்து வழிபட திருமணம் கை கூடும்.
(9) துளசி கல்யாணம் செய்தால் விரைவில் திருமணமாகும்.