
சென்னை வரும் ஜோத்பூர் ரயிலை வெடிகுண்டு வைத்து கவிழ்க்க போவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்எம்எஸ் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து, சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பின் பெயரை குறிப்பிட்டு இந்த மிரட்டல் விடுத்ததாக காவல்துறை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.