chicken tikka recipe
chicken tikka recipe

தேவையான பொருட்கள் :

கோழிக்கறி – கால் கிலோ
தயிர் – கால் கப்,
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்,
கடலைமாவு – அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – சிறிதளவு,
எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன்.

செய்முறை :

1) தயிரை நன்கு கலக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு, கடலைமாவு, தேவையான உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிதளவு எண்ணெய் விட்டுக் கலந்து கொள்ளவும்.

2) இந்த கலவையினை எலும்பில்லாதவாறு சிறு சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்த கோழித்துண்டுகளுடன் நன்கு கலக்கி வெண்ணெய் தடவி 3 மணி நேரம் நன்கு ஊற விடவும்.

3) இந்த துண்டுகளை ஒரு கம்பியில் நுழைத்து ஓவனில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும்.

4) சுவையான சிக்கன் டிக்கா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here