தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இந்த படம் 25-வது நாளை எட்ட உள்ளது. அதனை கொண்டாடும் விதமாக விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தளபதி விஜய் அட்லீ கூட்டணியில் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் பிகில். இதில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
இந்த படம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக எடுக்கப்பட்டது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
உறுதியானது தளபதி 65 இயக்குனர் – எதிர்பாராத கூட்டணியுடன் விஜய்?
படம் வெளியாகி எதிர்பார்த்த படி நல்ல வரவேற்பை பெற்றது. வெளியாகி 25-வது நாளை எட்டவுள்ள நிலையில், வெற்றி விழா கொண்டாட உள்ளது படக்குழு.
வெற்றி திரையரங்கில், காலை 8.30 மணிக்கு, வரும் ஞாயிற்று கிழமை நடித்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து, தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள்.