Sanga Tamilan Movie Review
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜ், ராசி கண்ணா, சூரி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சங்கத்தமிழன்.

பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வெளியாகியுள்ள இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

விஜய் சேதுபதியும் சூரியும் சினிமாவில் நுழைய முயற்சி செய்து வரும் நிலையில் ஒரு நாள் ஒரு கிளப்பில் ராஷி கண்ணாவை சந்திக்கின்றனர். முதல் சந்திப்பே மோதலாக தான் அமைகிறது.

அதன் பிறகு தமிழ் சினிமா வழக்கப்படி ராசி கண்ணாவிற்கும் விஜய் சேதுபதிக்கு காதல் உருவாகி விடுகிறது, ஆனால் ராஷி கண்ணாவின் அப்பா விஜய் சேதுபதியை பார்த்ததும் இவர் முருகன் இல்லை தமிழ் என கூறுகிறார்.

உண்மையில் யார் அந்த தமிழ்? தமிழுக்கும் முருகனுக்கும் என்ன சம்மந்தம் என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

இனி நானும் மாஸ் ஹீரோ தான் என முற்றிலும் வித்தியாசமாக மாஸ் காட்ட வேண்டும் என்ற முடிவோடு இப்படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி, அதில் ஓரளவிற்கு ஜெயித்தும் விட்டார்.

ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் அவர்களின் வேலைகளை அழகாக செய்துள்ளனர். சூரியின் காமெடி நல்லாவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

தொழில்நுட்பம் :

இசை :

விவேக் மெர்வின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவு :

ஆர். வேல் ராஜ் படத்தை கலர்புல்லாக காட்டியுள்ளார்.

எடிட்டிங் :

பிரவீன் கே.எல் எடிட்டிங் கச்சிதம்.

இயக்கம் :

தமிழ் சினிமா பார்த்து பழகி சலித்து போன பழைய கதையாக இருந்தாலும் அதை கொஞ்சம் வித்தியாசமாக கொண்டு சென்றுள்ளார் விஜய் சந்தர்.

தம்ப்ஸ் அப் :

1. விஜய் சேதுபதி நடிப்பு
2. கிளைமேக்ஸ்
3. சூரியின் காமெடி
4. இசை

தம்ப்ஸ் டவுன் :

1. பழைய கதை
2. சில காட்சிகள் மாஸ் படம்னா ஒரு நியாயம் வேணா என சொல்ல வைக்கிறது.

REVIEW OVERVIEW
சங்கத்தமிழன் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8dமொத்தத்தில் சங்கத்தமிழன் சாதாரண மாஸ் படம் தான்.