அதுக்குள்ள ஒரு வருஷம் ஆயிடுச்சு.. ரசிகர்களுக்கு நன்றி கூறிய கவின் – வைரலாகும் பதிவு!

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடிகராகவும் வலம் வந்தவர் கவின்.

மேலும் இவர் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமானார்.

கவின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் திரைக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டதை கவின் நினைவுகூர்ந்து ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

மேலும் இவர் தற்போது அறிமுக இயக்குனர் இயக்கத்தில் லிப்ட் என்ற திகில் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.