Bigil And Kaithi
காப்பி அடித்தால் தானே பிரச்சனை, அப்ப எனக்கு அந்த பிரச்சனை வராது என்று தளபதி 64 படத்தின் இயக்குனர் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

தளபதி விஜய், அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்த படம் பிகில். இது பெண்களின் கால்பந்து விளையாட்டையும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக உருவாகி இருந்தது.

இந்த படம் தீபாவளி விருந்தாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தை அட்லீ காப்பி அடித்து எடுத்துள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்தது.

பெங்களூரில் வசூல் வேட்டையாடியது பிகிலா? கைதியா?

பிகில் படத்துடன் கார்த்தி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் கைதி படமும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில், லோகேஷ் போட்டி ஒன்றில் படத்தின் கதையை பற்றி பேசி உள்ளார்.

கைதி படத்தில் பாடல்களும், கதாநாயகியும் இல்லாமல் எப்படி இவ்வளவு பெரிய வெற்றி பெற முடிந்தது என்றும், படத்திற்கு காப்புரிமை பிரச்சனை எதுவும் வரவில்லையா என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த லோகேஷ், காப்பி அடிக்காமல், ஒரிஜினல் கதையை படமாக்கினால் எந்த பிரச்சனையும் வராது என்று தெரிவித்து உள்ளார்.

இவர் சுத்தி வளைத்து பிகில் படத்தின் இயக்குனர் அட்லீயை குறிப்பிடுகிறாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

மேலும், தளபதி 64 படத்தின் இயக்குனர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here