கடவுள் செய்யாததை முதல்வர் செய்திருக்கிறார்! - கண்ணீருடன் முதல்வர் காலில் விழுந்த மாணவியின் தந்தை

7.5% Reservation in Tamilnadu : தமிழகத்தின் தற்போதைய முதல்வராக இருந்து வரும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார்.

அனைத்து துறைகளிலும் முதல்வரின் சிறப்பான செயல்பாடுகள் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த மாதம் தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா அறிக்கையை வெளியிட்டு அதனை இந்த ஆண்டு முதலே நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார்.

கடவுள் செய்யாததை முதல்வர் செய்திருக்கிறார்! - கண்ணீருடன் முதல்வர் காலில் விழுந்த மாணவியின் தந்தை

இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது.

இன்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பிற்கான அரசனை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு சென்னை நேரு உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் முதல்வரின் கையால் வழங்கப்பட்டது.

அப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர் நான் ஆரம்பத்திலிருந்தே அரசுப் பள்ளியில்தான் பயின்றேன். இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக என்னுடைய மருத்துவ படிப்பு கனவு நனவாகியுள்ளது. எனக்கு சாண்ட்லி மருத்துவமனையில் பயில்வதற்கு சீட் கிடைத்துள்ளது என மகிழ்ச்சியுடன் பேசினார்.

இதனையடுத்து பேசிய மாணவி ஒருவர் என் அப்பா சாதாரண தினக்கூலி. நான் மருத்துவ படிப்பு பயில வேண்டும் என ஆசைப்பட்டேன். இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டும் இல்லை என்றால் என்னுடைய கனவு நனவாகி இருக்காது.

என்னுடைய மருத்துவ கனவை நனவாக்கிய தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்.