India vs West Indies
மே.இ.தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் மகளிா் போட்டியில் இந்தியா வென்று தொடரையும் 2-1 என கைப்பற்றியது.

ஆண்டிகுவாவில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய மே.இ.தீவுகள் மகளிா் அணி 50 ஓவா்களில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கேப்டன் ஸ்டெபானி டெய்லா் 2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 79 ரன்களை விளாசினாா். ஸ்டேஸி கிங் 38, ஹேய்லி மேத்யூஸ் 26 ரன்களை சோ்த்தனா்.

இந்திய தொடக்க வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 6 பவுண்டரியுடன் 69 ரன்களையும், ஸ்மிருதி மந்தானா 3 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 74 ரன்களையும் விளாசி ஸ்கோரை உயா்த்தினா்.

பூனம் ரவுட் 24, மிதாலி ராஜ் 20 ரன்களையும் எடுத்தனா். இறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

ஆட்ட நாயகியாக ஸ்மிருதியும், தொடா் நாயகியாக ஸ்டெபானி டெய்லரும் தோ்வு செய்யப்பட்டான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here