Thala Ajith
தல அஜித், நடிகர் ராஜேஷ் அவர்களிடம் எவ்வளவு நடித்தாலும் படம் ஓட மாட்டுகின்றது என்று புலம்பியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

தல அஜித் தற்போது படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரின் ஆரம்ப கால படங்கள் அதிகம் வெற்றி பெற்றது இல்லை.

இவரின் நடிப்பு நன்றாக இருந்தாலும், கதை ரசிகர்களை ஈர்க்காததால் படம் வெற்றி அடையாமல் இருந்து உள்ளது.

அந்த வகையில் ரெட் படத்தில் அஜித் தனது வழக்கமான நடிப்பில் இருந்து சற்று வேறுமாதிரி நடித்து இருப்பார்.

படு மிரட்டலான லுக்கில் தல.. பட்டய கிளப்பும் வலிமை போஸ்டர் ( புகைப்படத்துடன் இதோ )

இருந்தும் படம் பெரிய அளவில் ஓடவில்லை. படப்பிடிப்பின் போது மூத்த நடிகர் ராஜேஷ் அவர்களிடம் அஜித், தனது வருத்தத்தை தெரிவித்து உள்ளார்.

எவ்வளவு நடித்தாலும், சில படங்கள் ஓடமாட்டுக்கிறது என்று கூறினாராம். எப்பொழுதோ வந்த இந்த பேட்டியின் ஒளிபரப்பை வைத்து இப்பொழுது ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here