Balloon
பிரபல நடிகர் செய்த செயலால் கடுப்பான தயாரிப்பாளர், தான் என் ஜென்மத்துக்கும் அதை மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி இருவரின் நடிப்பில் வெளியான படம் பலூன். இந்த படத்தை தயாரித்தவர் நந்த குமார்.

இவர் தயாரிப்பில் இது முதல் படம். சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் B படத்தின் அனுபவத்தை கூறியுள்ளார்.

இவர் தயாரித்த முதல் படத்திலேயே சினிமாவே வெறுத்து விட்டதாம், இனி படங்களே தயாரிக்க கூடாது என்ற முடிவெடுத்து விட்டதாக கூறியுள்ளார்.

மாலை போட்டுட்டு இப்படியெல்லாமா பண்ணுவீங்க.. சிம்புவை விளாசும் நெட்டிசன்கள் ( புகைப்படத்துடன் இதோ )

பலூன் படபிடிப்பின் போது இயக்குனர் காட்சிகளை ஹீரோயினிடம் சொல்ல அழைக்கும் போது அஞ்சலி என்று சொல்லி அழைப்பார்.

அதற்கு, ஜெய் கோபமாக பேசி இனி அவரை அப்படி அழைக்காதீர்கள், மேடம் என்று தான் அழைக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்.

மேலும், ஜெய் மற்றும் அஞ்சலியில் ஆடம்பர செலவால் படத்தில் அதிக செலவானதாகவும் அவர் கூறியிருந்தார்.

எப்படியோ படம் வெளியானது, இருந்தும் படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. இது போன்ற செயல்களை தன்னால் இந்த ஜென்மத்தில் மறக்க முடியாது என்று கூறினார்.

ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here