Nanban Rinson
தளபதி விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் நடித்த மில்லி மீட்டரின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

நண்பன் படத்தில் மில்லிமீட்டராக நடித்து இருந்தவர் ரின்சன். இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரபலமானவர்.

இவர் முதலில் நண்பன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பிறகு, தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்தில் நடித்து இருந்தார்.

அடேங்கப்பா வாயடைக்க வைத்த சந்தானத்தின் பையன் – வைரல் புகைப்படம் .!

நண்பன் படத்திற்கும், பவர் பாண்டி படத்திற்கும் உருவத்தில் மட்டும் மாற்றம் தெரியவில்லை நடிப்பிலும் நிறைய முன்னேறி இருந்தார் ரின்சன்.

பிறகு, எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த ரின்சன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Rinson

 

முகம் முழுவதும் தாடி, மீசையுடன் உள்ள இவரின் ஒரு புகைப்படத்தில் பார்க்க பெரிய ஹீரோ மாதிரி மாறியுள்ளார்.இவரை, வெள்ளித்திரையில் விரைவில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here