Tips for Fresh Face
Tips for Fresh Face

Tips for Fresh Face

உங்கள் முகம் பொலிவுடன் இருக்க வேண்டுமா? இதோ இயற்கையான, நீடித்த அழகை தரும் டிப்ஸ்!.

☆ முகம் பொலிவுடன் இருக்க:

☆ நீங்கள் செய்யும் சிறு சிறு விஷயங்கள் கூட உங்கள் சருமத்திற்கு அழகூட்ட கூடும். அதை ஆரம்பத்திலேயே கவனித்தால் முகத்தில் சுருக்கங்கள் வருவதை தள்ளிப் போடலாம். ஐம்பது வயதிலும் இளமையாக இருக்கலாம். அத்தகைய சிறு சிறு விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

☆ சந்தனப் பொடியை, ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது பால் மூன்றையும் நன்றாக கலந்து முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் நன்றாக தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.

☆ பச்சைத் தண்ணீரில் அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். சுடுநீரில் குளிப்பதை தவிர்த்து விடுங்கள். சுடுநீரில் குளித்தால் சரும துவாரங்கள் சுருங்கச் செய்வதோடு விரைவில் சுருக்கங்களை தந்துவிடும்.

☆ கேரட் சாறு எடுத்து அதனை சருமத்தில் பூசிக் கொள்ள வேண்டும். இதனால் அழகான, வழுவழுப்பான சருமம் தோன்றும். மேலும் நிறமும் வெண்மையாக மாறும்.

☆ ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் பாலாடையை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து, முகத்தை கழுவுங்கள். முகத்தில் சுருக்கங்கள் மறைந்து புதுப்பொலிவு உண்டாகும்.

☆ வைட்டமின் ஏ, சி, ஈ அதிகம் உள்ள உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தால், சுருக்கங்கள் ஏற்படாது.

☆ பீட்ரூட் அரைத்து அதன் விழுதை முகத்தில் பூசி, பின்னர் நன்றாக கழுவவும். இதனால் முகத்தில் சுருக்கங்கள் மறைந்து சருமம் இளமையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here