Thalapathy 64
தளபதி 64 படத்தில் வில்லனாக விஜய் சேதிபதிக்கு பதிலாக வேறு பிரபல நடிகர் தான் நடிக்க இருந்தாராம்.

அடுத்த ஆண்டு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் விஜய் நடித்து கொண்டு இருக்கும் தளபதி 64. இந்த படத்தில் பெரிய நடிகர் பட்டாளமே உள்ளது.

கைதி பட இயக்குனர் லோகேஷ் இந்த படத்தை இயக்குகிறார். முன்னதாக கைதி படத்தில் நடிக்க இருந்த விஜய் சேதுபதி, அந்த படத்தை தவறவிட்டுவிட்டார்.

தளபதி 64-ல் விஜய் என்ட்ரி இப்படித் தான் இருக்கும் – நடன இயக்குனர் தினேஷ் .!

மீண்டும், லோகேஷ் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே அதுவும், விஜய் அவர்களுக்கு வில்லனாக என்றதும் விஜய் சேதிபதி சற்று யோசித்த பிறகு நடிக்க ஒப்புக்கொண்டார்.

படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையம், விஜய் சேதுபதி நடித்து வரும் வில்லன் கதாபாத்திரத்தில் வேறு நடிகர் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அபிஷேக் பச்சன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த இயக்குனர், அபிஷேக்கிடம் கேட்டு உள்ளார், ஆனால், தேதி இல்லாத காரணத்தால் நடிக்க முடியாது என்று அபிஷேக் தெரிவித்துவிட்டார்.

இவரை தொடர்ந்து, KGF நடிகர் யாஷ் சரியாக இருப்பார் என்று அவரை கேட்ட போது, அவரும் தேதி இல்லாமல் மறுத்துவிட்டார்.

பிறகு, விஜய் சேதிபதியிடம் கேட்கவே அவரும் முதலில் மறுக்க பின் மற்ற பட தேதிகளை மாற்றிவிட்டு தளபதி 64 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here